மரங்கள் மௌனித்தன
விநாடி முட்கள்
உயிரைக் கிழித்துக்கொண்டு
நகரும். வினாடி முட்கள்.
பிராண்டிப் போகும்
பார்வை நகங்கள்
காற்றைச் சூரியன்
விழுங்கும்.
சூரியனின் சரியலுக்காய்
பியானோ வாசிக்கும்
காகங்கள்
பட்டறைகள் இரும்புடன்
சப்தம் கொப்பளிக்கும்.
கட்டிடங்கள்
காகங்களையும்
எச்சங்களையும் பார்த்து
எரிச்சல்படும்
வெய்யில் மேகத்துடன்
சேர்ந்து எருமைமாடாய்
அசையும்
~ ~ ~ ~ ~
மதிய உணவுக்கான
மணி அடிக்கப்போகிறது.
மதிய உணவுக்கான
மணி அடிக்கப்போகிறது.
அப்பாடா மரங்கள்
காற்றுறுஞ்ச மூச்சுவிடப்
போகின்றன.
-- 85 ஆம் வருட டைரி.
-- 85 ஆம் வருட டைரி.
அருமை சகோதரி...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)