ஞாயிறு, 22 மார்ச், 2015

வாழ்வே மாயம் :-



வாழ்வே மாயம் :-

சலனங்கள் சலனங்கள்
மலையிலிருந்து கடல் வரை
சலனங்கள்.

எத்தனை முறை
அடிபட்டாலென்ன ?
திரும்பவும் நிமிரத்தெரியாத
தென்னையாய் மனிதனும்.

காற்றிலகப்பட்ட சருகு இவன்
இவனுக்கென்று பாதையில்லை.
காற்றின் பாதை
இவனின் இராஜபாட்டை.

மரத்தில் கல்லில் பட்டு
நொறுங்கிப் போகும்
சருகு இவன்.

நெருப்பில் பொசுங்கி
நீரில் சவுத்துப் போகும்
சருகு இவன்.

இடையில் எத்தனை
அலைச்சல்கள் ?
சபலங்கள் ?
விண்ணிலிருந்து மண் வரை
சபலங்கள்.

வாழ்க்கை
அந்தத்தில் பிறந்த ஆதி
ஆதியில் பிறந்த அந்தம்.
அது ஒரு தொடர் சங்கிலி
வளைந்து நிமிர்ந்து கொள்ள
கோரையிலிருந்து மனிதன்
கற்றுக்கொள்ள வேண்டும்.

-- 82  ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))