சனி, 14 மார்ச், 2015

நான்



நான்
======
குப்பை பொறுக்கி
உலகம் கல்லாய்
இரும்பாய்க் கனத்துப் போகும்

இதுவோ
தூசி வழித்துச்
சேகரம் பண்ணும்.
வெறுத்து ஒதுக்க
முன்னுச்சியாய்க் கூத்தாடும்

குப்பை பொறுக்கி 
மூட்டை வழியவிட்டு
வார்த்தை தின்னும்.
காலில் சங்கிலி மாட்டி
ரோட்டோர மூத்திர மண்ணில்
புரளும்

கல்லடி வாங்கிக்
காற்றைச் சபிக்கும்.
கதறல்கள் கிழிக்கும்

எல்லாம் மறந்து
பல்லிளிக்கும்
குப்பை பொறுக்கி.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))