செவ்வாய், 20 ஜனவரி, 2015

புரியுமா உனக்கு



நான்

எனக்குள்ளே ஒரு வெறியுண்டு
புரியுமா உனக்கு

தலையை விரித்துக்
கண்ணைப் பரத்தி
நெற்றி சுருக்கி
உதட்டைக் கடித்துக்குதறும்
எனக்குள்ளே ஒரு வெறியுண்டு
புரியுமா உனக்கு

உடும்பு ஒட்டுதலாய்
குரங்குத் தழுவலாய்
வழுக்குப்பாறையில்
ஆணியடித்த நங்கூரமாய்
எனக்குள்ளே ஒரு வெறியுண்டு
புரியுமா உனக்கு

கற்கள் எறிந்து
பற்கள் மென்று
நாக்கால் சுட்டு
மனதால் கதறும்
எனக்குள்ளே ஒரு வெறியுண்டு
புரியுமா உனக்கு


5 கருத்துகள்:

  1. புரிந்தது அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நிகண்டு.காம் புதிய பொலிவுடன் புது சாப்ட்வேர் உடன் புதிய வேகத்தில் இந்த தமிழர் திருநாளில் ஆரம்பமாகிறது. தமிழில் எழுதுபவர்களையும் படிபவர்களையும் இணைக்கும் தளம் நிகண்டு.காம் வழியாக உங்கள் வலைப்பூக்கள்,புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. கருத்துக்கு நன்றி

    ரமணி சகோ

    தனபாலன் சகோ

    நிகண்டு.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))