காற்றுக்குள்
சிதறிப்போனது
என்
சுவாசம்
பாலைகளுக்குள் சோலை
இதுவோ
வரிசையோரத்துக்
கடைசித்
தென்னை
சலவைக்
கற்கள் கீழ்
புழுங்கும்
மண்
ரோஜாக்கிளைகள்
உயிரோடு
புதைக்கப்படும்
உயிர்ப்பித்தலுக்காய்
மூடிக்குள்
கசியும்
மையாய்
மனம்
எழுத்துக்
குழந்தைக்காய்
ஏங்கும்.
-- 84 ஆம் வருட டைரி.

சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி தளிர் சுரேஷ்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!