வியாழன், 4 டிசம்பர், 2014

தளிர்களாகவே



தளிர்களாகவே
இருந்திடல் வேண்டும்
முதிர்தலும்
பழுத்தலும்
உதிர்தலும் அறியாமல்

இறைத்தலும்
சிரித்தலும் மட்டுமே அறிந்து

பூக்காவிடினும்
முட்களால் நோகடிக்கப்படாமல்

கோப வார்த்தைகளால்
பாத்திகள் கட்டிக்கொள்ளாமல்

புன்னகைச் சிறகு
அணிந்துகொண்டு
சமாதானத் தூதுவனாய்

மனசை எடுத்து
இலையாய் விரிக்கும்
தளிர்களாகவே
இருந்திடல் வேண்டும்.

-- 84 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. 30 வருடப் பொக்கிஷம் - தளிர்களாகவே இருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. இல்லை உமேஷ். சொல்லிக் கொண்டேன் மனதுள் இருக்க வேண்டும் என்று :)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))