சனி, 20 டிசம்பர், 2014

இராணித் தேனீ

தனக்காய்
வலை பின்னும் சிலந்தி

தாமரை கூம்புதலும்
மலர்தலுக்கும் மட்டுமே.

கொட்டுதல் மறந்த
இராணித் தேனீ
கூட்டிற்கு பாரமாய்

சமதர்மங்கள்
புகைபோக்கிக்குழாயின்
கசடுகளாய்

இரையெடுக்க மட்டுமே
வெளிவரும் மனநத்தை

காதல்.. நடப்பில்
அர்த்தம் செத்த வார்த்தை.

-- 84 ஆம் வருட டைரி

4 கருத்துகள்:

  1. கொட்டுதல் மறந்த இராணித்தேனீ கூட்டிற்கு பாரமாய்... இந்த வரி சூப்பரா இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன் சகோ

    நன்றி விச்சு சார்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))