வியாழன், 11 டிசம்பர், 2014

பூசனைக்குரிய பொய்சாட்சி:-



பூசனைக்குரிய பொய்சாட்சி:-

சாட்சியாய் இருப்பது
துயரமில்லை
பொய்சாட்சி சொல்லக்
கூண்டிலேறியதுதான்.

அடலேறு மஞ்சு விரட்டு
ஆவாரம் பூக்கூடு
உடனேறிப் போந்த
ஜோடிப்புறாக்கள்

ஆலம் விழுது
எல்லாம் கேட்டு விழுந்து
சீந்தில் கொடியாய்
இருபக்கமுள் சுமந்த
எல்லை வேலியில்

எதை வெட்டி சமன் செய்ய
ரத்தம் விதைத்து
ரத்தம் விளையுமிந்த
யுத்தத்தில்

தப்பிப் பிழைக்குமென்றால்
பொருதாமல் இருக்குமென்றால்
பொய்சாட்சியளிப்பதும்
பூசனைக்குரியதே.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))