இருட்டில்
வசித்திருக்கும்
கரப்பான்.
இருட்டுள்ளே
இரையெடுத்து
இரையாகி
இறந்துயிர்த்து
கம்பீரமில்லாத
கறுப்புக்
கரப்பான்.
உணவுக்குள்
உமிழ்ந்து
செல்லும்
கரப்பான்.
கரைப்பான்.
அடுப்படியின்
நாற்றங்களில்
மிச்ச
உணவுக்காய்
இச்சைத்தவம்
செய்யும்
இருளுள்
செங்கோலோச்சும்
மீசைவிரித்து
விழிஉருட்டும்
மட்டக்
கரப்பான், கரைப்பான்.
-- 84 ஆம் வருட டைரி.
-- 84 ஆம் வருட டைரி.
கரப்பான்களை காட்சிப்படுத்தியமை சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி தளிர் சுரேஷ்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!