செவ்வாய், 7 அக்டோபர், 2014

நீயும் நானும்



மேகத்துள் துளிகளாய்
நீயும் நானும்
பிரிந்து உதிர்ந்து விடுவோமோ

புத்தகத்தின் பக்கங்களாய்
நீயும் நானும்
விலக்கி படிக்கப்பட்டு விடுவோமோ

திரிகளின் நாவுகளாய் நாம்
ஊமையாக்கபட்டு விடுவோமோ

நூலும் ஊசியுமாய் நாம்
கடமை முடிந்ததும்
கழன்று விடுவோமோ

குவிந்த மல்லிக்குள்
வாசமாய் நாம்
நுகரப்பட்டு விடுவோமோ

இமைமேல் முடிகளாய் நாம்
நீக்கப்பட்டு விடுவோமோ

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))