நொடிப்பூக்கள்.
உதிர்கின்றன நொடிப்பூக்கள்.
ஒவ்வொரு இதழ்களிலும்
குழந்தை, குமரி, தாரம் என
சுருக்கங்கள் படியத் துவங்குகிறது.
தாதியாயிருந்து
தாய்மைக் கோடுகளோடு
அசைந்தாடும் சருகின்கீழ்
புதிதாய்க் காய் கனிய
விழுந்து தவழ்ந்து
உருவாக்கிய மண்ணை
முத்தமிட்டு அணைக்கிறது சருகு.
சொன்னவிதம் ரசனை...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ.
பதிலளிநீக்கு