குயிலாய் வாழ்தல் இனிது.
கூவிக் கொண்டிருப்பது
எளிதாயிருக்கிறது..
கூடுகட்டுதலும்
முட்டையிடுதலும்
குஞ்சு பொரித்தலும்
பராமரித்தலும்
கொத்துப்படும்போது
மரிப்பிலிருந்து
உயிர்த்தலும்
போதுமெனக்
கானம் கரையக்
கருத்த வானம்
வெளுத்துக் கொண்டிருக்கிறது.
பறக்கவியலா இறக்கைகள்
ஈரத்தால் கனத்திருக்கின்றன.
குயிலிடமிருந்து கூவுதலை மட்டுமே கண்டு, ரசிக்கும் உலகத்துக்கு அதன் வாழ்க்கையையும் வலிகளையும் நயமாக உரைக்கும் வரிகள்...
பதிலளிநீக்குஅது ஒரு காலம்...
பதிலளிநீக்குசிறந்த சிந்தனை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி இளங்கோ
பதிலளிநீக்குநன்றி தனபால் சகோ
நன்றி சுரேஷ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!