தவிர்க்க முடியவில்லை
அதன் வலை விரிப்பை.
எட்டி எட்டி எட்டிய உயரம் வரை
தட்டித் தீர்த்தாயிற்று.
எச்சிலைத் துப்பித் துப்பி
மூலைகளைக் கைப்பற்றும்.
மையத்தில் முயங்கி
பிடிபட்டதைச் சருகாக்கும்.
எட்டக் கால் பதித்தோடி
விளையாடுகிறததன் உலகில்.
எத்தனை முறை பிடித்தாலும்
தப்பியோடுகிறது சிலந்தி.
வணக்கம்
பதிலளிநீக்குசிலந்தி பற்றிய பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!