வெள்ளி, 26 ஏப்ரல், 2013

இனிப்பு, காரம், காஃபி.

ஒன்றுமற்ற போதுகளில்
கொறிக்கக் கொஞ்சம் முத்தம்.
இனிப்புக்கு ஒன்றுதானா..
கோபித்து ஓடுகையில்
காரம் கமறுகிறது..
எப்போதும்போல
பார்வைத் துணுக்கை
நனைத்துச் சுவைத்தபடி
அவரவர் சோஃபாவிலிருந்து
கோர்க்கும் விரல்களை
காஃபிக் கோப்பையிலிருந்து
எழும் ஆவி சுற்றுகிறது.
தொலைக்காட்சி விளம்பரங்கள்
விட்ட இடைவெளியில்
ஒருவரில் ஒருவரை
ரசிக்கும் புன்னகையில்
விருட்சமாய் வேரோடிப்
பின்னியிருக்கிறது காதல்..

3 கருத்துகள்:

  1. ஒருவரில் ஒருவரை
    ரசிக்கும் புன்னகையில்
    விருட்சமாய் வேரோடிப்
    பின்னியிருக்கிறது காதல்.. - Arumai kathal pinaippu.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))