ஞாயிறு, 10 மார்ச், 2013

வலிகளோடு வாழ்தல் இனிது.

உண்பது போலொரு பாவனை
உடுப்பது போலொரு பாவனை,
ஞாபகமறதிக் கூட்டில்
குஞ்சு பொறித்திருக்கும்
விதம்விதமான வலி முட்டைகள்
ஒன்று காலெழும்பிப் பறக்க
இன்னொன்று முட்டையிட
வாழ்வது போலொரு பாவனை
வலி மட்டுமே உண்மை/
வயோதிகத்தில் யாரற்றபோதிலும்
மிச்ச ஞாபகங்களோடு கூடவே இருக்கும்
வலிகளோடு வாழ்தல் இனிது.

4 கருத்துகள்:

  1. இனிய ஞாபகங்கள் இருந்தால் தான், வலி தெரியாது...

    பதிலளிநீக்கு
  2. ஆம் தனபாலன். :) கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. விதவிதமான வலிமுட்டைகள் நல்ல உவமை.

    "ஒன்று காலெழும்பிப் பறக்க
    இன்னொன்று முட்டையிட"... ..
    துன்பம் வருவேளையிலே சிரியுங்கள் என்று சும்மாவா சொன்னார்கள் இல்லாவிட்டால் வலியே கொன்றுவிடும்.

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))