வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்

சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்:-
*************************************************

குடும்பத்தலைவிகள்
முகப்புத்தகத்தோழிகளாய்
பரிணாம வளர்ச்சியில்.

கிளைகளை நீட்டி
தன்னை எங்கெங்கும்
நிலைநாட்டி..

தோழிகளுடன்
அளவளாவுவதில்
கொஞ்சலும் பொய்ச்சண்டையும்.

சில தோழர்களுடன்
பழகுவதில் கொஞ்சம்
சிக்கல்களும்..

கற்பனைக் கோடுகளுடன்
பூமி குறிக்கப்படுவதான சாயலில்
லட்சுமண  ரேகையுடனும்.

எல்லா அட்சத்திலும்
சரியான பாகையில் சுற்றி
தீர்க்கமான ரேகையில்

துருவனை அச்சாக்கி
உருண்டு முடிக்கையில்
சூரியனும் சுற்றிவரும் தூரம்தான்

4 கருத்துகள்:

  1. துருவனை அச்சாக்கி
    உருண்டு முடிக்கையில்
    சூரியனும் சுற்றிவரும் தூரம்தான் .......


    உண்மைதான் எல்லாம் எம்மைபொறுத்தே ..அழகிய கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மொத்தத்தில் அதிக கட்டுப்பாடுகளுடன் ...உண்மைதானே

    பதிலளிநீக்கு
  3. நன்றி சௌம்யதேசம்

    நன்றி கவியாழி கண்ணதாசன் . ஆம்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))