வியாழன், 10 நவம்பர், 2011

கருவிழிகொண்டு கண்களை மூடுவது..

ஒரு அன்பை பொத்தி வைப்பது
ஒரு நெருப்பை மூடுவது

ஒரு மழையை ஊற்றி
எரிமலையை அடக்குவது

ஒரு விதையை ஊன்றி
செடியை மறைக்க முயல்வது

ஒரு பூத்த பூவின் வாசத்தை
காற்று திருடாமல் செய்வது

விரிகதிர் சூரியனை
சல்லாத்துணி கொண்டு மறைப்பது.

கண் மூடிய பூனையாய்
தனக்குள்ளே அமிழ்வது

ஒரு அன்பை அடக்குவது
கருவிழிகொண்டே கண்களை மூடுவது

3 கருத்துகள்:

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? எத்தனை ரசனையுடன் சொல்லியிருக்கிறீர்கள்... பிரமித்தேன், ரசித்தேன். நன்றி நவில்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))