வெள்ளி, 21 அக்டோபர், 2011

தங்கைகளுக்கு... அக்கா குயிலின் கீதம்.

அக்காக்களும் தங்கைகளும்
அவ்வப்போது செல்லமாய்
அடித்துக் கொள்வதற்கும்
அடித்துச் சொல்வதற்கும்.

அக்காக்கள் தவறுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்ல.
அக்கக்கோ குயிலின்கீதமாய்
ஏக்கமும் சோகமும்.

வலிமையாய் இருக்கிறாய்
வாளெடுப்பதில்லை நீ
இருந்தும் வாளாவிருக்கிறேன்.,
வலிமையற்று உன்முன்.

யாரும் இருந்தும் இல்லாமலும்
வாழ்ந்து பார்ப்பதே வாழ்க்கைதான்.
உனக்குப்பின்னும் உலகம் இருக்கிறது
உறைந்துபோய்விடாமல் உயிர்ப்போடு..

4 கருத்துகள்:

  1. உனக்குப் பின்னும் உலகம் இருக்கிறது | உறைந்து போய்விடாமல் உயிர்ப்போடு... மனதில் நிற்கும் வரிகள். அருமை!

    பதிலளிநீக்கு
  2. விகட்ன் வெற்றி, கலக்கல் கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. உனக்குப்பின்னும் உலகம் இருக்கிறது
    உறைந்துபோய்விடாமல் உயிர்ப்போடு..

    உங்கள் ஆசியுடன் நிமிர்ந்து நிற்கும் நீலா...

    பதிலளிநீக்கு
  4. நன்றி கணேஷ்

    நன்றி சிபி

    நன்றி நீலா..:)

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))